24.12.07
6.12.07
நிலா நல்ல பேருதானே?
நிலா நல்ல பேருதானே? ஆனா யாருமே என்ன நிலான்னு கூப்புடவே மாட்டேங்கராங்க.அப்பா எப்பவும் மயிலுன்னுதான் கூப்புடுவாங்க.அப்புறம் வாலு செல்லம் தங்கம் கண்ணு குட்டி குட்டிமயிலு குட்டிதங்கம் மயிலுகுட்டி(மயிலு குட்டியா போடும்?)குட்டி புள்ள இப்படித்தான் கூப்பிடுவாரு.அதும் நல்ல குஷி மூடுல கொஞ்சுனாருன்னா அவ்ளோதான் மான்குட்டில ஆரம்பிச்சு பன்னிகுட்டி(பன்னிகுட்டி ரொம்ப அழகா இருக்குமாமே?) வரைக்கும் ஜூவுல இருக்க எல்லா அனிமல்ஸ் பேர்ட்ஸ் எல்லா பேரையும் சொல்லி கொஞ்சிருவாரு.
அம்மா இன்னும் மோசம்.அவங்க என்ன கூப்புடர பேருல பாதி யாருக்கும் புரியாது.பப்லு பப்லுக்குஞ்சு, பப்பி(நாய்குட்டியதானே இப்படி சொல்வாங்க?)பப்பிம்மா அம்முகுட்டி மொட்ட சிஞ்சுகுட்டி மொட்டிக்கா அறுந்தவாலு இப்படில்லாம் கூப்டுவாங்க.இன்னும் புரியாத வார்த்தை எது கிடைச்சாலும் அத என்ன கொஞ்ச யூஸ் பண்ணிருவாங்க, பிகிலு டூமாங்கோலின்னுலாம் கொஞ்சுவாங்கன்னா பாத்துகோங்க.
சரி இவங்கதான் என் பேர சொல்றதில்லன்னா பெரியப்பாக்கு என்ன பொம்மின்னு கூப்பிடரதுல சந்தோஷம்( பொம்மை மாதிரி இருக்கேனாம்)பெரியப்பா என்ன உருட்டி வெச்ச புரோட்டா மாவுன்னு சொல்றது தனிகதை.
இவ்வளவு ஏன் நானே என் பேர இன்னும் "இலா"ன்னுதான் சொல்லிகிட்டு இருக்கேன்
கடைசில என்ன நிலான்னு தமிழ்மணத்துல இருக்க மாமா அத்தைல்லாம்தான் சொல்ரீங்க.பாப்பாக்கு ரொம்ப சந்தோஷம்.
7.11.07
தீபாவளி வாழ்த்துக்கள்
25.10.07
நிலா மொழி கற்க வாங்க
படு பகீரத முயற்சிக்குப் பின் நிலா மொழி எழுத்து வடிவில்
கூகா-- கொடுக்கமாட்டேன்
குகூ --- கொடு
சு(ய்)யும்-- சுடும்
பெப்பு --செருப்பு
போப்பு-- சோப்
கா(க்)கு-- காசு
கோ(ன்)னு- போன்
பிச்சாச்சி,பிஜ்ஜாட்-- பிஸ்கட்
மும்மோட்டு-- ரிமோட்
மொம்மை--பொம்மை
எயிய போயா-- வெளில போலாம்
சூக்கி ---- தூக்கி
ஆப்பு ---- சாப்பாடு
மம்மு--- பால்
நானா---வேண்டாம்
முய்யி-- முடி
தைக்கால்-- சைக்கிள்
பாப்பாவு--பாப்பாவுடையது
அப்பாவு-- அப்பாவுடையது
மாமு-- மாடு
பப்பா--டப்பா
தானி---சாமி
(தொடரும்)
இதை விக்கிபீடியால சேத்துப்பாங்களா?
8.10.07
7.10.07
27.9.07
23.9.07
19.9.07
13.9.07
20.8.07
14.8.07
13.8.07
12.8.07
8.7.07
2.7.07
19.6.07
19.5.07
4.5.07
30.4.07
23.4.07
14.4.07
13.4.07
27.3.07
25.2.07
25.1.07
24.1.07
1.1.07
Subscribe to:
Posts (Atom)