6.12.07

நிலா நல்ல பேருதானே?
நிலா நல்ல பேருதானே? ஆனா யாருமே என்ன நிலான்னு கூப்புடவே மாட்டேங்கராங்க.அப்பா எப்பவும் மயிலுன்னுதான் கூப்புடுவாங்க.அப்புறம் வாலு செல்லம் தங்கம் கண்ணு குட்டி குட்டிமயிலு குட்டிதங்கம் மயிலுகுட்டி(மயிலு குட்டியா போடும்?)குட்டி புள்ள இப்படித்தான் கூப்பிடுவாரு.அதும் நல்ல குஷி மூடுல கொஞ்சுனாருன்னா அவ்ளோதான் மான்குட்டில ஆரம்பிச்சு பன்னிகுட்டி(பன்னிகுட்டி ரொம்ப அழகா இருக்குமாமே?) வரைக்கும் ஜூவுல இருக்க எல்லா அனிமல்ஸ் பேர்ட்ஸ் எல்லா பேரையும் சொல்லி கொஞ்சிருவாரு.அம்மா இன்னும் மோசம்.அவங்க என்ன கூப்புடர பேருல பாதி யாருக்கும் புரியாது.பப்லு பப்லுக்குஞ்சு, பப்பி(நாய்குட்டியதானே இப்படி சொல்வாங்க?)பப்பிம்மா அம்முகுட்டி மொட்ட சிஞ்சுகுட்டி மொட்டிக்கா அறுந்தவாலு இப்படில்லாம் கூப்டுவாங்க.இன்னும் புரியாத வார்த்தை எது கிடைச்சாலும் அத என்ன கொஞ்ச யூஸ் பண்ணிருவாங்க, பிகிலு டூமாங்கோலின்னுலாம் கொஞ்சுவாங்கன்னா பாத்துகோங்க.
சரி இவங்கதான் என் பேர சொல்றதில்லன்னா பெரியப்பாக்கு என்ன பொம்மின்னு கூப்பிடரதுல சந்தோஷம்( பொம்மை மாதிரி இருக்கேனாம்)பெரியப்பா என்ன உருட்டி வெச்ச புரோட்டா மாவுன்னு சொல்றது தனிகதை.


இவ்வளவு ஏன் நானே என் பேர இன்னும் "இலா"ன்னுதான் சொல்லிகிட்டு இருக்கேன்


கடைசில என்ன நிலான்னு தமிழ்மணத்துல இருக்க மாமா அத்தைல்லாம்தான் சொல்ரீங்க.பாப்பாக்கு ரொம்ப சந்தோஷம்.

37 comments:

said...

வாம்மா மின்னலு, வவ்வால் மாமா கிட்ட வாங்கிகட்டிக்கிட்டது மறந்துருச்சா...

said...

//நிலா நல்ல பேருதானே?//

சுவிட் நாம். ஐ லைக் இட் மா.
:)

said...

நிலா குட்டி நல்ல பேருதான் !!! உங்க அப்பாவை ஊருக்கு வரும் பொழுது ரெண்டு பேரும் கவனிச்சிடலாம்:)

இளா said...

//
இவ்வளவு ஏன் நானே என் பேர இன்னும் "இலா"ன்னுதான் சொல்லிகிட்டு இருக்கேன்
//
ஓகே டா செல்லம்

மங்களூர் சிவா said...

'சூப்பர் நேம்'டா என் கன்னுகுட்டி

said...

அட.. உனக்குள்ளே இத்தனை பெயர்களா? :-)))

எல்லாம் நல்லாத்தான் இருக்கு...

said...

நிலாக் குட்டி,

இப்போதான் இப்டி எல்லா பேரும் சொல்லி அப்பா அம்மா கூப்பிட முடியும்...காலத்துக்கும் நிலாதானே..போனாப் போது..இன்னும் நெறய்ய பேர் இது மாதிரி வச்சுக் கூப்பிடட்டும்..வளந்ததும் நீதான் விடமாட்டியே...

(அனுபவம் பேசுகிறது)

said...

என் செல்லக்குட்டி.. உனக்கு இம்புட்டு பேரு இருக்கா.. வாழ்க்கையில நெறய பேரு வாங்கனுங்கறது இதுதானா?.
எல்லா பேரும் சூப்பருடா கண்ணா...

said...

போட்டோ சூப்பரு....... நந்து மாமாகிட்டயும் , சசி அக்காகிட்டயும் சொல்லிவையி.. ஏதாவது கலாட்டா செஞ்சா ரசிகன் மாமாகிட்ட சொல்லிடுவேன்னுட்டு.. ஓகே..ஹிஹி..

said...

படம் சூப்பர் - பதிவும் சூப்பர் - இவ்ளோ பேரா ?? அம்ம்மாஆ

said...

அராத்து, பிசாசு, ஜொள்ளி( ஒரு காலத்துல செம ஜொள்ளு விடுவா) இதெல்லாம் விட்டாச்சே :P

said...

aha inoru bablu kuttya puppymma va haha....enga veedilauum oru puppymavum oru richu kuttyum irukiname so ungala nila ende koopiduran.
nila nila oodi vaa :-)

said...

பவன், நம்ம வவ்வால் மாமாதானே பாத்துக்கலாம்

said...

//சுவிட் நேம். ஐ லைக் இட் மா.
:)//
நன்றி கைப்புள்ள மாமா

said...

இளா மாமா நாம ரெண்டு பேரும் மேட்ச் ஆகறோம் போல?

said...

//'சூப்பர் நேம்'டா என் கன்னுகுட்டி//

சிவா மாமா நீங்க தனியா கன்னுகுட்டின்னு சொல்றீங்க :P

said...

குசும்பன் மாமா எப்போ இந்தியா வரீங்க?

said...

நன்றி மைஃபிரெண்ட் அக்கா

said...

பாசமலர் ஆண்ட்டி போறபோக்க பாத்தா காலத்துக்கும் எங்கப்பா என் பேர சொல்லி கூப்புடுற மாதிரி தெரில

said...

ரசிகன் மாமா இனி எனஃக்கு கவலை இல்ல. எதாச்சும் ஒன்னுன்னா உங்களுக்கு போன் பண்ணீடரேன். பிளைட் புடிச்சு வந்திருங்க

said...

சீனா சார் என்னோட விசிறின்னுல்லாம் சொல்லிட்டீங்க.நன்றி நன்றி

said...

மாமா தாய்லாந்துல நீங்க விட்ட ஜொள்ளபத்தி ஈரோடு முழுக்க பேச்சு. நீங்க என்ன ஜொள்ளின்னு சொல்றீங்களா? :P

said...

சினேகிதி உங்க வீட்டு பப்பிக்கு வேற வேற பேருல்லாம் இருக்கா?

said...

//நிலா said...

மாமா தாய்லாந்துல நீங்க விட்ட ஜொள்ளபத்தி ஈரோடு முழுக்க பேச்சு. நீங்க என்ன ஜொள்ளின்னு சொல்றீங்களா? >:P //
என்ன.. போட்டு குடுக்கிறயா?
அப்போ நான் வாங்கி குடுத்த ட்ரஸ்ஸ திருப்பி குடு.. உன் சகவாசமே எனக்கு வேணாம் :-))

said...

ட்ரெஸ்ஸா???? அப்படி எதுவும் வந்து சேரவே இல்லயே?

Anonymous said...

mayilu nalla irukku

said...

//mayilu nalla irukku//

எனக்கும் பிடிக்கும்.வருகைக்கு நன்றி

said...

குட்டி பாப்பாக்கு இத்தன பேரா??!!!
அடேங்கப்பா! கலக்கறியே கண்ணா.

said...

நிலா நல்ல பேரு இல்ல
சூப்பர் சூப்பர் சூப்பர் பேரும்மா!

(இந்த வலைப்பூ வருகின்ற பொழுதெல்லாம் மனசிற்கு சிறகு
முளைத்துவிடுகிறது, மாலை நேர தென்றலாய் இதயம் வருடுகிறது நிலாவின் புகைப்படங்கள். சுத்திப்போடவும்!)

"நிலா"ரசிகன். :)

said...

நிலா நல்லா உங்க அப்பா நடு மண்டையில் அம்மா வெச்சு இருக்கும் சப்பாத்தி கட்டையால நாலு சாத்து சாத்து நயன் தாராவுக்கும் விக்கிரமுக்கும் வித்தியாசம் தெரியாமல் நயன் தாராவை விக்கிரம் என்கிறார்.

said...

செல்லம் புது போஸ்ட் அட்லீஸ்ட் புது போட்டோ எங்கடா???

said...

சகாரா ஆண்ட்டி மிக்க நன்றி


"நிலா"ரசிகன் மாமா உங்கள் கமெண்ட்டே கவிதையாக உள்ளது . ரொம்ப சந்தோஷம் மாமா

said...

குசும்பன் மாமா எங்கப்பா அப்பாவி அதான் அப்படி சொல்லிட்டாரு.நீங்கள்ளாம்தான் பேட்பாய்

said...

சிவா மாமா புதுபோஸ்ட்+போட்டோ போட்டாச்சு

said...

he he romba romba happy ayitten endha post pathu :)
with all the blessings in the world to Nila

said...

நிலா நல்ல பேருதான் நாங்க எல்லாம் உன்னை நிலான்னு கூப்புடுறோம்

said...

Yaruppa ithu....naan en pillaya kuppidura mathiri ellam kuppidurathu......panni kutti than innum shock-a irukku......ennamo.....Nila nalla perunnu yaru sollanum...naan solren...namma thamizh thai solra...appuram enna kannu..jamai...

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro