1.10.08

நிலாபுராணம்

ஹாய் ஹாய் ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க? போஸ்ட்டே போடறதில்லன்னு எல்லாரும் திட்றாங்க. ஆனா என்னோட டைப்பிஸ்ட் சமீபகாலமாவே இம்சை பண்ணறார். மேட்டர் என்னான்னா அவருக்கும் எழுதனுமாம். அதும் நம்ம சந்தனமுல்லை ஆண்ட்டி, பப்புக்கா பத்தி எழுதறத பாத்துட்டு நானும் உன்ன பத்தி எழுதறேன் குட்டின்னு ஒரே அடம்.

அப்பா அவங்கள்ளாம் வெவரமானவங்க நல்லா எழுதுவாங்க. உங்களுக்கு அதெல்லாம் வராதுப்பான்னு சொன்னா அதுக்கு தரைல விழுந்து பொரண்டு அழுவறதா? ஒரு குட்டிபாப்பா என்னதான் பண்ணுவேன். சரி தொலையுதுன்னு ரெண்டு போஸ்டுக்கு மட்டும் எழுத விடுறேன். அதும் என்ன பத்திதான் எழுதனும். கொஞ்சமாத்தான் எழுதனும்ன்னு சொல்லிட்டேன்

நீங்களும் நோட் பண்ணி சொல்லுங்க ரொம்ப ப்ளேடு போட்டா ஃபோட்டோ போடறதோட நிப்பாட்டிக்க சொல்லிடலாம். இனி போட்டோஸ்க்கு நடுவில வரும் வரிகள் எங்கப்பாவுது. அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.


நிலா அம்மாவோட வெளில போய்ட்டு வந்து கதவை திறக்கறாங்க. அப்போ வீடு முழுசும் எல்லா லைட்டும் எரியுது, அவங்கம்மா உடனே. "பாரு குட்டி அப்பா எல்லா லைட்டும் போட்டுட்டு போயிட்டாரு.

அதுக்கு பாப்பா சொன்னது "ஹையோ ஹையோ அப்பாக்கு பொப்பே இல்ல"


நீ ஒருத்திதான் குட்டி இதுவரைக்கும் சொல்லாத ஆளு. இப்ப சொல்லிட்ட :(



நிலாஅம்மா என்னை கூப்பிட்டது எனக்கு காதில் விழவில்லை. நிலாவிடம் பாரு "உங்கப்பாவுக்கு காதே கேக்கல" என்றதும், நிலா "அப்பா அப்பா" என்று கூப்பிட்டது. நான் என்ன குட்டி என்று கேட்டதும், திரும்பி அம்மாவிடம் "பாரும்மா காது கேக்குது"



ஹைப்ரீட் நாவல்பழம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பாப்பாக்கு பிடிக்காது. ஆனா வாங்கிட்டுவந்த உடனே அதை கழுவி பக்கதுல உக்காந்துகிட்டு ஒவ்வொரு பழமா எனக்கும் அவங்கம்மாக்கும் தீரும் வரைக்கும் ஊட்டிவிட்டுட்டுதான் மறுவேலை. ஒரு பழத்தை சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் உண்ணிப்பாக வாயை பாத்துக்கொண்டிருக்கும். விதையை துப்பியவுடன் கையில் தயாராக வைத்திருக்கும் பழம் ஊட்டிவிடப்படும்.

அப்போ என்னுடைய முறைக்கு கையில் வைத்திருந்த பழத்தை சசி கேக்கவும். அந்த பழத்தை தராமல் வேறு பழத்தை தேடி கொடுத்தது. அப்போதான் கவனித்தேன். அடிபடாத பெரிய பழங்கள் அப்பாக்கு, மற்றவைதான் அம்மாவுக்கு.

நிலாஅம்மா சாப்பாடு சாப்பிடும்போது "கொஞ்சமா சாப்பிடு, அப்பாக்கு வேணும்"

இது மட்டுமல்ல. கண்ணில் ஓரமாக ஒட்டி இருக்கும் முடியை இருப்பா இரு என்று சொல்லி கவனமாக எடுத்துவிடுவது போன்ற அப்பாவுக்கென்ற தனி அக்கறை காட்டும் பல சமயங்களில் மகளுக்குள் மறைந்திருக்கும் அம்மாவை உணர முடியும். இதை நான் மட்டுமல்ல பெண்குழந்தை பெற்ற எல்லா அப்பாக்களும் இந்த சலுகையை உணர்ந்திருக்கலாம். பையன்கள்ளாம் அம்மாவுக்குத்தாங்க சப்போர்ட்டு.



பிரபலங்கள் பேட்டியின்போது பதில்சொன்னால்
சிக்கல் வரும் கேள்விகளை நோ கமெண்ட்ஸ் என்றோ அல்லது கேள்வியே காதில் விழாத மாதிரியோ தவிர்ப்பார்களே. அதே டெக்னிக் நிலாவிடம் பாக்கலாம்.


நான் : "நீ அப்பா செல்லமா?அம்மா செல்லமா?"

நிலா : " அப்பா ஆட்டுட்டிய தொட்டுப்பாத்தேன் நானு"

நான் : அப்டியா குட்டி, சரி இத சொல்லு , நீ அப்பா செல்லமா அம்மா செல்லமா?

நிலா : "புஜ்ஜி டோராகிட்ட கவலபடாத டோரான்னு சொல்லுச்சு"

கடுப்பாகி இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துடனும்ன்னு குட்டி முதல்ல நான் சொன்னதுக்கு பதில் சொன்னாத்தான் உண்டுன்னு வம்படியா கேட்டா.

" அப்பா செல்லம் அம்மா செல்லம் அம்மாசெல்லம் அப்பாசெல்லம் அம்மாப்பாசெல்லம் அப்பாம்மா செல்லம்"

(இதுக்கு அர்த்தம் கேப்பியா? கேப்பியா? கேப்பியா? கேப்பியா?)



இன்னும் எல்லா வார்த்தையுமே பேச ஆரம்பிக்கல. அதுக்குள்ள எல்லொருக்கும் நிக்நேம் வைக்க ஆரம்பிச்சாச்சு. ரெண்டு பெரியம்மாக்களில் ஒருத்தர் பேரு பப்ளிமாஸ் பெம்மா, இன்னொருதர் பேரு கோழி பெம்மா. இந்த பேர்களில் கூப்பிடும் போது முகத்தில் கொப்பளிக்கும் .குறும்பை பார்க்கனுமே...

எனக்கு என்ன பேர் தெரியுமா? "குண்டுபையன்" :)

54 comments:

said...

மீ த பர்ஸ்ட்.... நிலா குட்டி சூப்பர்

said...

டைப்பிஸ்டோட முதல் இரண்டு குறிப்பும் சூப்பர்... சில சமயம் உண்மை பேச வேண்டி இருக்கு நிலா... ;))

said...

படங்கள் அருமை நந்து. அப்படியே லேப்டாப்பை எடுத்து கொஞ்ச வேண்டும் போல் உள்ளது.. :))

இரண்டாவது படம் ப்ரொஃபசனல் என்றாலும் அந்த கடைசி படம் சூப்பர்....

குறிப்புகள் அருமை.. முக்கியமா
//பையன்கள்ளாம் அம்மாவுக்குத்தாங்க சப்போர்ட்டு.//
அந்த வயித்தெரிச்சல ஏன் கேக்குறீங்க!!! :))))

***

நாலு நாளா என் ரீடர்ல இருக்கு.. நானும் ஒவ்வொரு தடவையும் (இதுவரைக்கும் 10 தடவையாவது) வந்து பின்னூட்டம் போடனும்னு பாத்தா போஸ்ட் நாட் ஃபவுன்ட் அப்படின்னு சொல்லிடும். எப்படியோ இன்னிக்கு பப்ளிஷ் பண்ணிட்டீங்க.

said...

//
அப்பா அவங்கள்ளாம் வெவரமானவங்க நல்லா எழுதுவாங்க. உங்களுக்கு அதெல்லாம் வராதுப்பான்னு சொன்னா அதுக்கு தரைல விழுந்து பொரண்டு அழுவறதா?
//

ஹைய்யோ ஹைய்யோ
:)))))))

said...

நல்லா இருக்கு பதிவு.

said...

நன்னி தமிழ்பிரியன் மாமா.
//சில சமயம் உண்மை பேச வேண்டி இருக்கு நிலா... ;))//

கரெக்ட்டுத்தான் :)

said...

நன்னி வெண்பூ மாமா

//பின்னூட்டம் போடனும்னு பாத்தா போஸ்ட் நாட் ஃபவுன்ட் அப்படின்னு சொல்லிடும்//

மேட்டர் என்னான்னா என் டைப்பிஸ்ட் ப்ளாக் செட்டிங்க்ஸ்ல எதோ நோண்டி வெச்சிட்டார். பப்ளிஷ் பண்ணா பாரகிராஃபா பிரியாமா எல்லா லெட்டரும் பாசத்தோட ஒண்ணு மண்ணாவே வருது.

இன்னைக்குத்தான் ப்ரச்சனைய கண்டு புடிச்சு சரி பண்ணாரு.

சரி ஆதர்ஷ் எப்படி இருக்கான்?

said...

சிவா மாமா உங்கள சப்போர்ட் பண்ண ஆள் வருதா இல்ல அத்தைய சப்போர்ட் பண்ண ஆள்வரபோவுதா?

said...

//சரி ஆதர்ஷ் எப்படி இருக்கான்? //

ரொம்ப நல்லா இருக்காண்டா செல்லம். இன்னும் உன் போட்டோவை அவன்கிட்டயும் உங்க அத்தை கிட்டயும் காட்டலை.

இன்னிக்கு வீட்டுக்கு போனப்புறம்தான் காட்டணும்.. ச்சோ ஸ்வீட்.. ச்சோ க்யூட்.. :))))

said...

நிலா நிலா - செல்லம் - குட்டிமா - நல்லா இருக்கும்மா பதிவு - அப்பா லிட்டே சொல்லு

said...

நிலா... நீ அழகுதானே குட்டி இதை திரும்ப வேற சொல்லணுமா...?! :)

said...

உன்னோட டைப்பிஸ்ட் நல்லாவே எழுதறார்...:)

said...

\\
நிலாஅம்மா என்னை கூப்பிட்டது எனக்கு காதில் விழவில்லை. நிலாவிடம் பாரு "உங்கப்பாவுக்கு காதே கேக்கல" என்றதும், நிலா "அப்பா அப்பா" என்று கூப்பிட்டது. நான் என்ன குட்டி என்று கேட்டதும், திரும்பி அம்மாவிடம் "பாரும்மா காது கேக்குது"
\\

இது சூப்பரு...

said...

நன்றி சீனாதாத்தா. அப்பாகிட்ட சொல்லிடறேன்

said...

நன்றி தமிழன் மாமா. டைப்பிஸ்ட்கிட்ட இத சொன்னா தலைகால் புரியாது.

said...

// அப்பா அவங்கள்ளாம் வெவரமானவங்க நல்லா எழுதுவாங்க. உங்களுக்கு அதெல்லாம் வராதுப்பான்னு சொன்னா அதுக்கு தரைல விழுந்து பொரண்டு அழுவறதா? ஒரு குட்டிபாப்பா என்னதான் பண்ணுவேன்.//

நிலாகுட்டி போனாபோகுது மாசம் இந்த மாதிரி ஒரு பதிவாவது போட (குண்டுப்பையனுக்கு!) அனுமதி குடுத்திடலாம்.

said...

நீ ரொம்ப அழகா இருக்க நிலா. உங்க அப்பா நல்ல போட்டோ எடுக்கிறாரு. எங்க அம்மாவும் இருக்காங்களே..பாதி போட்டோவில தலையை வெட்டிடுவாங்க...

-- தீஷு

said...

நிலா குட்டி படமெல்லாம் சூப்பரூ!

இதை நல்லா எடுத்த டைப்பிஸ்ட்டுக்கு அப்புறம் பதிவும் போட்டுக்கொடுத்ததுக்கு செல்லமா ஒரு கடி கடிச்சு தேங்க்ஸ் சொல்லிக்கணும் லீவு நாள்ல ஒ.கேவா!

said...

சூப்பரா இருக்கேடா நீ, எல்லா ஃபோட்டோஸ்லயும்!! அம்மாகிட்டே சொல்லி சுத்தி போட சொல்லும்மா!

//அப்பா செல்லம் அம்மா செல்லம் அம்மாசெல்லம் அப்பாசெல்லம் அம்மாப்பாசெல்லம் அப்பாம்மா செல்லம்//

liked all ur answers esp. enjoyed this answer!! :-)))!!

உன்னோட டைப்பிஸ்ட் கிட்டே சொல்லி பதிவுகளைத் கண்டிப்பாக தொடரவும்..ஒகேவா!!

said...

ஹாய் நிலாக்குட்டி!

ஃபோட்டோஸ் எல்லாம் சூப்பர்!

ஐ லவ் யூ டியர்!

said...

//இதை நல்லா எடுத்த டைப்பிஸ்ட்டுக்கு அப்புறம் பதிவும் போட்டுக்கொடுத்ததுக்கு செல்லமா ஒரு கடி கடிச்சு தேங்க்ஸ் சொல்லிக்கணும் லீவு நாள்ல ஒ.கேவா//

ஆயில்யன்! டைப்பிஸ்டையா கடிக்கணும்னு சொல்றீரு?

said...

//
அப்பா அவங்கள்ளாம் வெவரமானவங்க நல்லா எழுதுவாங்க. உங்களுக்கு அதெல்லாம் வராதுப்பான்னு சொன்னா அதுக்கு தரைல விழுந்து பொரண்டு அழுவறதா?
//

ஹைய்யோ ஹைய்யோ
:)))))))

said...

நன்றி கார்த்திக் மாமா.அப்போ அனுமதி கொடுத்துடலாமா?

said...

நன்றி தீக்ஷு, ஆனா உங்க அம்மா எவ்ளோ சூப்பரா மாண்டிசொரி சிஸ்டம் பத்தில்லாம் படிச்சு உனக்கு சொல்லி கொடுத்து அதையெல்லாம் அழகா எழுதறாங்க. ஆக்சுவலா எனக்கு பொறாமையா இருக்கு தீக்ஷு :)

said...

ஆயில்யன் மாமா இப்பல்லாம் அப்பா என்ன திருப்பி கடிக்கறார் :(

said...

//ஐ லவ் யூ டியர்!//

சிபி மாமா தேவிஅத்தைகிட்ட சொல்லி நாக்குலயே சூடு வைக்க சொல்றேன்

said...

நன்றி சந்தனமுல்லை ஆண்ட்டி.தொடர சொல்லலாம்தான். ஆனா நாலு வரி எழுதறதுக்கே டைப்பிஸ்ட் நொண்டியடிக்கிறார். பாக்கலாம் என்ன பண்ணுவாருன்னு

said...

உங்க அப்பாவுக்கு போட்டோ எடுக்க கத்து கொடுக்கிரதுக்கே நேரம் சரியா இருக்கு எங்கிருந்து பதிவு போடுவாராம்

said...

உங்க அப்பாவ குண்டுன்னு சொன்னா
குண்டா இருக்குறவங்கள என்னான்னு சொல்லுவா

said...

மிஸ்டர் குண்டுப்பையன்

நிலா படங்கள் ரொம்ப ரொம்ப அழகு, கூடவே கமெண்டுகளும். திரும்ப திரும்ப மூன்று முறை படித்தேன்.

நிலா படங்களை வேலையின் போது பார்த்தால் instant relaxation கிடைக்கிறது. Thanks for sharing.

said...

முதல் படம் தான் கலக்கல்... எந்த செயற்கையும் இல்லாம....

உலகம் என்ன வேணும்னாலும் பண்ணட்டும்.. எனக்கு இந்தப் பூ தான் முக்கியம்னு சொல்ற மாதிரி.. இதான் நிஜக் குழந்தைத் தனம்.. மத்ததுல எல்லாம் ஈரோட்டு பிசிஸ்ரீராம் லைட்டா தெரியறார்.. :)

said...

பொப்பே இல்ல = பொழப்பே இல்ல & பொறுப்பே இல்ல.. :)

Anonymous said...

பாப்பா நீ ரொம்ப அழகா இருக்கேடா!

உன் குறும்பு தனமான பேச்சு ரொம்ப அழகு; நான் உன் விசிறி ஆயிட்டேன்.

said...

வால்பையன் மாமா அப்போ உங்களுக்கு உண்மையிலேயே வால் இருக்கா?

எப்படி பாப்பாவோட ஃகொஸ்டின்? :P

said...

கயல்விழிக்கா உங்க கமெண்ட் பாத்து அப்பாக்கு ரொம்ப சந்தோஷம். நன்றி

said...

பொடியன் மாமா பொழப்பு பொறுப்பு ரெண்டுக்கும் சேத்துத்தான் சொன்னேன். அப்பா பொழப்ப பத்தித்தான் ஊருக்கே தெரியுமே

said...

cheenu மாமா மிக்க நன்றி

said...

//வால்பையன் மாமா, அப்போ உங்களுக்கு உண்மையிலேயே வால் இருக்கா? :)//

இருந்தது, உங்க அப்பா தான் நறுக்கி விட்டுட்டார்

said...

//சிபி மாமா தேவிஅத்தைகிட்ட சொல்லி நாக்குலயே சூடு வைக்க சொல்றேன்//

ஹிஹி. அதை பேரு வேற! ஏம்பா குடும்பத்துல கும்மி அடிக்கிறே!

said...

//சிபி மாமா தேவிஅத்தைகிட்ட சொல்லி நாக்குலயே சூடு வைக்க சொல்றேன்//

இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

ஐ லவ் யூ டியர்!

said...

குட்டி செல்லம் ரொம்ப க்யூட்...Blog ஒரு கவிதை மாதிரி இருக்கு. செல்லத்துக்கு சுத்தி போட சொல்லுங்க.

said...

Romba super Nila Kutti......Unnoda typist unnai romba rasichu romba romba alaga photo eduthurukkar.....irunthalum..poruppe illanu solrathu thappu illiya...

nee romba cute-a irukka?..antha yellow chudi yaru amma-va?

said...

நிலா போட்டோஸ் எல்லாம் நல்லா இருக்கு
//
நான் : "நீ அப்பா செல்லமா?அம்மா செல்லமா?"

நிலா : " அப்பா ஆட்டுட்டிய தொட்டுப்பாத்தேன் நானு"

நான் : அப்டியா குட்டி, சரி இத சொல்லு , நீ அப்பா செல்லமா அம்மா செல்லமா?

நிலா : "புஜ்ஜி டோராகிட்ட கவலபடாத டோரான்னு சொல்லுச்சு"
//

இந்த பகுதி பிடித்திருந்தது.

said...

ராஜ் மாமா. பொன்னாத்தா அத்தை(nila), புகழன் மாமா மிக்க நன்றி.

யெல்லோ சுடி எங்க அம்மாதான்.

said...

ஆமாங்க பெண்குழந்தைங்க அப்பாகிட்ட தான் அட்டாச்டா இருக்கும்.
அதுல எனக்கு கூட ஒரு சிறு வருத்தம் உண்டு.

போட்டோவும், நிலாவின் குறும்பு பேச்சும் அருமை.

said...

கெட்டிக்காரப் பொண்ணு. பொண்ணுங்க பொதுவா அப்பிடித்தாங்க:)

said...

ஆகா...ஆகா...என்ன சொல்ல...அருமை..அழகு...படங்களும் நீங்க சொன்ன விதமும் ;))


முதல் இரண்டு படங்களுக்கு ஒரு ஸ்பெசல் வாழ்த்துக்கள் ;))

said...

மூன்றாவது படம் அற்புதம்..குழந்தையின் கண்களில் மினுக்கும் ஒளிக்கு நூறு கவிதை எழுதலாம்.

Anonymous said...

Cho chweet!

said...

நிலா குட்டி... உன் புகைப்படங்கள் கொள்ளை அழகு :)

நந்து, நிலாவின் புகைப்படங்களுடன் அவள் குறும்புகளை தொடர்ந்து எழுதுங்களேன் :)

Anonymous said...

//இன்னும் எல்லா வார்த்தையுமே பேச ஆரம்பிக்கல. அதுக்குள்ள எல்லொருக்கும் நிக்நேம் வைக்க ஆரம்பிச்சாச்சு//

நிலா உங்க அப்பாவுக்கு நீ வைச்ச பேரு சூப்பர். அப்பாவை இந்த மாதிரி அடிக்கடி படம் போட்டு பதிவு போட சொல்லு. ஒரு அழகான சினிமா பாத்தமாதிரி இருக்கு.

said...

உங்க போட்டோ ரொம்ப அழகா இருக்கு
கொள்ளை அழகு

உங்க அப்பாவுடைய வரிகள் அருமை

said...

படம் ஒண்ணு ஒண்ணும் அருமை. உங்களோட வரிகள் வேடிக்கையாக இருந்தது. அப்பா செல்லம் ஜோக் அருமையோ அருமை

said...

நான் மட்டுமல்ல பெண்குழந்தை பெற்ற எல்லா அப்பாக்களும் இந்த சலுகையை உணர்ந்திருக்கலாம்.//

ஆமாமா .......... கொடுத்து வச்சிருக்கணும் அதுக்கெல்லாம் .. இல்ல!?

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro