22.2.09

வந்தாச்சு வந்தாச்சு

ரொம்ப நாள் ஆகிப்போச்சோ? இப்பவும் போஸ்ட் போடலைன்னா டோட்டல் டேமேஜ் ஆயிடும் போல. ஒரு க்ரூப்பே டேமேஜ் பண்ணிகிட்டு இருக்கு. சோம்பேறி அப்பா, ஓட்டை கம்ப்யூட்டர் இதோட நான் என்ன செய்யட்டும்.

ம்ஹூம் போட்டோஸ் மட்டுமே

6.11.08

என் கண்ணுக்குள்ளும் நீதானடி கண்ணம்மா...
ஹையா அம்மா கண்ணுல அப்படியே தெரியறேனே.

ஃப்ளிக்கர்ல முன்னாடியே போட்ட படம்தான். ஃப்ளிக்கர் போட்டோஸ் தெரியாத நாட்டுக்காரர்களுக்கும், அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச போட்டோவாம் அதுக்காகவும் தனியா இங்கே...

25.10.08

நிலாவின் வித விதமான தீபாவளி வாழ்த்துக்கள்
பாதிப்பேர் ஊருக்கு போயிருப்பீங்க. எல்லோரும் தீபாவளியை நல்லா எஞ்சாய் பண்ணுங்க.


அனைவருக்கும் இந்த குட்டிபாப்பாவின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

(படத்த க்ளிக்கி பாருங்க. ஏனோ இந்த தடவை புல்ஸ்கிரீன்ல் படம் வரல)

1.10.08

நிலாபுராணம்

ஹாய் ஹாய் ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க? போஸ்ட்டே போடறதில்லன்னு எல்லாரும் திட்றாங்க. ஆனா என்னோட டைப்பிஸ்ட் சமீபகாலமாவே இம்சை பண்ணறார். மேட்டர் என்னான்னா அவருக்கும் எழுதனுமாம். அதும் நம்ம சந்தனமுல்லை ஆண்ட்டி, பப்புக்கா பத்தி எழுதறத பாத்துட்டு நானும் உன்ன பத்தி எழுதறேன் குட்டின்னு ஒரே அடம்.

அப்பா அவங்கள்ளாம் வெவரமானவங்க நல்லா எழுதுவாங்க. உங்களுக்கு அதெல்லாம் வராதுப்பான்னு சொன்னா அதுக்கு தரைல விழுந்து பொரண்டு அழுவறதா? ஒரு குட்டிபாப்பா என்னதான் பண்ணுவேன். சரி தொலையுதுன்னு ரெண்டு போஸ்டுக்கு மட்டும் எழுத விடுறேன். அதும் என்ன பத்திதான் எழுதனும். கொஞ்சமாத்தான் எழுதனும்ன்னு சொல்லிட்டேன்

நீங்களும் நோட் பண்ணி சொல்லுங்க ரொம்ப ப்ளேடு போட்டா ஃபோட்டோ போடறதோட நிப்பாட்டிக்க சொல்லிடலாம். இனி போட்டோஸ்க்கு நடுவில வரும் வரிகள் எங்கப்பாவுது. அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.


நிலா அம்மாவோட வெளில போய்ட்டு வந்து கதவை திறக்கறாங்க. அப்போ வீடு முழுசும் எல்லா லைட்டும் எரியுது, அவங்கம்மா உடனே. "பாரு குட்டி அப்பா எல்லா லைட்டும் போட்டுட்டு போயிட்டாரு.

அதுக்கு பாப்பா சொன்னது "ஹையோ ஹையோ அப்பாக்கு பொப்பே இல்ல"


நீ ஒருத்திதான் குட்டி இதுவரைக்கும் சொல்லாத ஆளு. இப்ப சொல்லிட்ட :(நிலாஅம்மா என்னை கூப்பிட்டது எனக்கு காதில் விழவில்லை. நிலாவிடம் பாரு "உங்கப்பாவுக்கு காதே கேக்கல" என்றதும், நிலா "அப்பா அப்பா" என்று கூப்பிட்டது. நான் என்ன குட்டி என்று கேட்டதும், திரும்பி அம்மாவிடம் "பாரும்மா காது கேக்குது"ஹைப்ரீட் நாவல்பழம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பாப்பாக்கு பிடிக்காது. ஆனா வாங்கிட்டுவந்த உடனே அதை கழுவி பக்கதுல உக்காந்துகிட்டு ஒவ்வொரு பழமா எனக்கும் அவங்கம்மாக்கும் தீரும் வரைக்கும் ஊட்டிவிட்டுட்டுதான் மறுவேலை. ஒரு பழத்தை சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் உண்ணிப்பாக வாயை பாத்துக்கொண்டிருக்கும். விதையை துப்பியவுடன் கையில் தயாராக வைத்திருக்கும் பழம் ஊட்டிவிடப்படும்.

அப்போ என்னுடைய முறைக்கு கையில் வைத்திருந்த பழத்தை சசி கேக்கவும். அந்த பழத்தை தராமல் வேறு பழத்தை தேடி கொடுத்தது. அப்போதான் கவனித்தேன். அடிபடாத பெரிய பழங்கள் அப்பாக்கு, மற்றவைதான் அம்மாவுக்கு.

நிலாஅம்மா சாப்பாடு சாப்பிடும்போது "கொஞ்சமா சாப்பிடு, அப்பாக்கு வேணும்"

இது மட்டுமல்ல. கண்ணில் ஓரமாக ஒட்டி இருக்கும் முடியை இருப்பா இரு என்று சொல்லி கவனமாக எடுத்துவிடுவது போன்ற அப்பாவுக்கென்ற தனி அக்கறை காட்டும் பல சமயங்களில் மகளுக்குள் மறைந்திருக்கும் அம்மாவை உணர முடியும். இதை நான் மட்டுமல்ல பெண்குழந்தை பெற்ற எல்லா அப்பாக்களும் இந்த சலுகையை உணர்ந்திருக்கலாம். பையன்கள்ளாம் அம்மாவுக்குத்தாங்க சப்போர்ட்டு.பிரபலங்கள் பேட்டியின்போது பதில்சொன்னால்
சிக்கல் வரும் கேள்விகளை நோ கமெண்ட்ஸ் என்றோ அல்லது கேள்வியே காதில் விழாத மாதிரியோ தவிர்ப்பார்களே. அதே டெக்னிக் நிலாவிடம் பாக்கலாம்.


நான் : "நீ அப்பா செல்லமா?அம்மா செல்லமா?"

நிலா : " அப்பா ஆட்டுட்டிய தொட்டுப்பாத்தேன் நானு"

நான் : அப்டியா குட்டி, சரி இத சொல்லு , நீ அப்பா செல்லமா அம்மா செல்லமா?

நிலா : "புஜ்ஜி டோராகிட்ட கவலபடாத டோரான்னு சொல்லுச்சு"

கடுப்பாகி இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துடனும்ன்னு குட்டி முதல்ல நான் சொன்னதுக்கு பதில் சொன்னாத்தான் உண்டுன்னு வம்படியா கேட்டா.

" அப்பா செல்லம் அம்மா செல்லம் அம்மாசெல்லம் அப்பாசெல்லம் அம்மாப்பாசெல்லம் அப்பாம்மா செல்லம்"

(இதுக்கு அர்த்தம் கேப்பியா? கேப்பியா? கேப்பியா? கேப்பியா?)இன்னும் எல்லா வார்த்தையுமே பேச ஆரம்பிக்கல. அதுக்குள்ள எல்லொருக்கும் நிக்நேம் வைக்க ஆரம்பிச்சாச்சு. ரெண்டு பெரியம்மாக்களில் ஒருத்தர் பேரு பப்ளிமாஸ் பெம்மா, இன்னொருதர் பேரு கோழி பெம்மா. இந்த பேர்களில் கூப்பிடும் போது முகத்தில் கொப்பளிக்கும் .குறும்பை பார்க்கனுமே...

எனக்கு என்ன பேர் தெரியுமா? "குண்டுபையன்" :)

25.7.08

வெறும் போட்டோஸ்தான் -- மேட்டர் ஒண்ணும் இல்ல


3.5.08

நிலாவுக்கு இன்று இரண்டு

இன்னையோட ரெண்டு வயசாயிடுச்சு பாப்பாக்கு.இன்னைக்கு என்னோட இரண்டாவது பிறந்தநாள்.

தமிழ் பதிவுலகில் எனக்கு தனி இடம் கொடுத்திருக்கீங்க.எனக்காக அப்பா கமெண்ட் போட்டாலும் எனக்குத்தான் பதில் கொடுதிருக்கீங்க. அதுக்கு எல்லா பதிவுலக மாமா,அத்தை,தாத்தா, பாட்டி எல்லோருக்கும் குட்டிபாப்பாவின் மனமார்ந்த நன்றி.

பாப்பா உங்களோட அன்புச்சிறையில்தான் இப்பவும் இருக்கேன், எப்பவும் இருப்பேன்.

என் பிறந்தநாளுக்காக பதிவு போட்டவங்க மற்றும் போன் பண்ணி சொன்ன அனைவருக்கும் நன்றி. முடிந்தவரை தொலைபேசியில் வாழ்த்து சொன்னவங்களுக்கு அப்போவே நன்றியை சொல்லி இருக்கிறேன். சொல்லமுடியாமல் போனவங்களுக்கு நன்றி இங்கே.

உங்களோட பாசத்தை நினைத்து நினைத்து பாப்பா ஓவர் ஃபீலிங்ஸ் ஆகி
இப்படி கதறி அழுதுட்டேன்.
இனியும் அன்பு உள்ளங்களான உங்களின் மனம்கனிந்த வாழ்த்துக்களோடும் ஆசிகளோடும் என் பயணத்தை தொடர்வேன்நன்றி நன்றி நன்றி...

இவங்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்நிலா குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.வாழ்த்தலாம் வாருங்கள்!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்ஹாப்பி பர்த்டே நிலா டார்லிங்அபி மற்றும் நிலா கேக்குகாக 2
ஜீவன்கள் வெயிட்டிங்
கடைசியாசங்கம்னா ரெண்டுஇங்கயும் கொடுத்தாச்சு :P

10.4.08

நிலாவின் காலடியில் நழுவுது வானம் - கூர்க்

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro