25.7.08

வெறும் போட்டோஸ்தான் -- மேட்டர் ஒண்ணும் இல்ல






3.5.08

நிலாவுக்கு இன்று இரண்டு





இன்னையோட ரெண்டு வயசாயிடுச்சு பாப்பாக்கு.இன்னைக்கு என்னோட இரண்டாவது பிறந்தநாள்.









தமிழ் பதிவுலகில் எனக்கு தனி இடம் கொடுத்திருக்கீங்க.எனக்காக அப்பா கமெண்ட் போட்டாலும் எனக்குத்தான் பதில் கொடுதிருக்கீங்க. அதுக்கு எல்லா பதிவுலக மாமா,அத்தை,தாத்தா, பாட்டி எல்லோருக்கும் குட்டிபாப்பாவின் மனமார்ந்த நன்றி.









பாப்பா உங்களோட அன்புச்சிறையில்தான் இப்பவும் இருக்கேன், எப்பவும் இருப்பேன்.









என் பிறந்தநாளுக்காக பதிவு போட்டவங்க மற்றும் போன் பண்ணி சொன்ன அனைவருக்கும் நன்றி. முடிந்தவரை தொலைபேசியில் வாழ்த்து சொன்னவங்களுக்கு அப்போவே நன்றியை சொல்லி இருக்கிறேன். சொல்லமுடியாமல் போனவங்களுக்கு நன்றி இங்கே.









உங்களோட பாசத்தை நினைத்து நினைத்து பாப்பா ஓவர் ஃபீலிங்ஸ் ஆகி








இப்படி கதறி அழுதுட்டேன்.








இனியும் அன்பு உள்ளங்களான உங்களின் மனம்கனிந்த வாழ்த்துக்களோடும் ஆசிகளோடும் என் பயணத்தை தொடர்வேன்



நன்றி நன்றி நன்றி...





இவங்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்



நிலா குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.



வாழ்த்தலாம் வாருங்கள்!



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



ஹாப்பி பர்த்டே நிலா டார்லிங்



அபி மற்றும் நிலா கேக்குகாக 2
ஜீவன்கள் வெயிட்டிங்








கடைசியா



சங்கம்னா ரெண்டு



இங்கயும் கொடுத்தாச்சு :P

10.4.08

நிலாவின் காலடியில் நழுவுது வானம் - கூர்க்

19.2.08

கதை சொல்லி நிலா. சொந்தக்குரலில் சொல்லும் கதை



.
.
.








.
.
.







பாப்பா தனியா கதை சொல்ல இன்னும் கொஞ்சம் நாள் ஆகும். இப்போ அப்பாவோடு சேர்ந்து கதை சொல்லி இருக்கேன். நல்லா இருக்கான்னு கேட்டுட்டு சொல்லுங்க
.
.
.


















Get this widget Track details eSnips Social DNA

2.1.08

ஒரு "கவிதாயினி" உதயமாகிறாள்...



24.12.07

ரெக்கை கட்டி பறக்குது நிலாவோட சைக்கிள்


6.12.07

நிலா நல்ல பேருதானே?




நிலா நல்ல பேருதானே? ஆனா யாருமே என்ன நிலான்னு கூப்புடவே மாட்டேங்கராங்க.அப்பா எப்பவும் மயிலுன்னுதான் கூப்புடுவாங்க.அப்புறம் வாலு செல்லம் தங்கம் கண்ணு குட்டி குட்டிமயிலு குட்டிதங்கம் மயிலுகுட்டி(மயிலு குட்டியா போடும்?)குட்டி புள்ள இப்படித்தான் கூப்பிடுவாரு.அதும் நல்ல குஷி மூடுல கொஞ்சுனாருன்னா அவ்ளோதான் மான்குட்டில ஆரம்பிச்சு பன்னிகுட்டி(பன்னிகுட்டி ரொம்ப அழகா இருக்குமாமே?) வரைக்கும் ஜூவுல இருக்க எல்லா அனிமல்ஸ் பேர்ட்ஸ் எல்லா பேரையும் சொல்லி கொஞ்சிருவாரு.



அம்மா இன்னும் மோசம்.அவங்க என்ன கூப்புடர பேருல பாதி யாருக்கும் புரியாது.பப்லு பப்லுக்குஞ்சு, பப்பி(நாய்குட்டியதானே இப்படி சொல்வாங்க?)பப்பிம்மா அம்முகுட்டி மொட்ட சிஞ்சுகுட்டி மொட்டிக்கா அறுந்தவாலு இப்படில்லாம் கூப்டுவாங்க.இன்னும் புரியாத வார்த்தை எது கிடைச்சாலும் அத என்ன கொஞ்ச யூஸ் பண்ணிருவாங்க, பிகிலு டூமாங்கோலின்னுலாம் கொஞ்சுவாங்கன்னா பாத்துகோங்க.




சரி இவங்கதான் என் பேர சொல்றதில்லன்னா பெரியப்பாக்கு என்ன பொம்மின்னு கூப்பிடரதுல சந்தோஷம்( பொம்மை மாதிரி இருக்கேனாம்)பெரியப்பா என்ன உருட்டி வெச்ச புரோட்டா மாவுன்னு சொல்றது தனிகதை.


இவ்வளவு ஏன் நானே என் பேர இன்னும் "இலா"ன்னுதான் சொல்லிகிட்டு இருக்கேன்


கடைசில என்ன நிலான்னு தமிழ்மணத்துல இருக்க மாமா அத்தைல்லாம்தான் சொல்ரீங்க.பாப்பாக்கு ரொம்ப சந்தோஷம்.

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro